ADDED : ஜூலை 06, 2024 05:44 AM
வெங்கடேசபுரம்: பெங்களூரில், 3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நர்சரி பள்ளி ஆசிரியை மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெங்களூரு வெங்கடேசபுரம், அன்வர் லே - அவுட்டில், தனியார் நர்சரி பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியை, தங்கள் 3 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், என்று அவரது பெற்றோர், கே.ஜி.,ஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்படி, ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். குழந்தையின் பெற்றோர் கூறுகையில், 'எங்கள் மகளை, வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் சேர்த்தோம்.
ஜூன் 6ம் தேதியில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறாள். கடந்த 10 நாட்களாக, பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க துவங்கினாள்.
'ஏன் என்று கேட்டபோது, தனக்கு அந்தரங்க பகுதி வலிக்கிறது, 'மேடம்' என்று கூறினாள். உடனடியாக குழந்தையை, வாணி விலாஸ் மருத்துவமனையில் சேர்த்து, போலீசில் புகார் அளித்து உள்ளோம்' என்றனர்.