ADDED : ஜூலை 18, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜீஷ், 28. இவர், மலப்புரம் மாவட்டத்தில் போலீசாக பணியாற்றுகிறார்.
இவர், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜீஷை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயராஜ் கூறுகையில், ''அஜீஷ் இதற்கு முன்னரும் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்,'' என்றார்.