ரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர்
ரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர்
ADDED : மார் 09, 2025 11:59 PM
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் போரிவாலி ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன.
சமீபத்தில், இங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்ட போது, அதிலிருந்த பெண் பயணி ஒருவர் இறங்க முயன்றார். ரயில் புறப்பட்ட சில வினாடிகளில் இறங்க முற்பட்ட அவர், தடுமாறி கீழே விழுந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர், பெண் இறங்குவதை பார்த்து ஓடினார். கீழே விழுந்த அவரை, துரிதமாக செயல்பட்டு நடைமேடையை ஒட்டிய பள்ளத்தில் விழாமல் காப்பாற்றினார். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.
இந்த வீடியோவை, ரயில்வே நிர்வாகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. 'தயவுசெய்து ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சிக்காதீர்கள்' என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை, துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.