ADDED : ஏப் 25, 2024 11:13 PM

மைசூரு: பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் யதுவீர், பரபரப்பாக பிரசாரம் செய்தார். ஆனால் அவரது தாய் பிரமோதா தேவி, பிரசாரத்தில் பங்கேற்காமல் தன் பேரனுடன், மிருகக்காட்சி சாலைக்குச் சென்று பொழுது போக்கினார்.
லோக்சபா தேர்தலில், மைசூரு தொகுதியில் அரச குடும்பத்து யதுவீர், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். தனக்கு சீட் அறிவிக்கப்பட்ட பின், உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
யதுவீரின் மனைவி திரிஷிகாவும் கூட, பெண்களுடன் சேர்ந்து கணவருக்காக ஓட்டு கேட்டார்.
ஆனால் யதுவீரின் தாய் பிரமோதா தேவி, பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தன் செல்ல பேரன் ஆத்யவீருடன், நேற்று முன் தினம் மைசூரின் மிருகக்காட்சி சாலைக்குச் சென்று பொழுதுபோக்கினார். வன விலங்குகளை கண்டு மகிழ்ந்தார்.
நடிகை மேக்னா ராஜும் கூட, தன் மகன் ராயன், தாய் பிரமிளாவுடன் மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்தார். அவரும், பிரமோதா தேவியை சந்தித்து பேசினார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

