சிவகுமார் முதல்வராக வேண்டும் சாமுண்டீஸ்வரியிடம் பிரார்த்தனை
சிவகுமார் முதல்வராக வேண்டும் சாமுண்டீஸ்வரியிடம் பிரார்த்தனை
ADDED : ஜூலை 23, 2024 05:59 AM
ராம்நகர்: 'துணை முதல்வர் சிவகுமார், விரைவில் முதல்வராக வேண்டும்' என, சாமுண்டீஸ்வரி கோவிலில், அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஆடி மாதத்தையொட்டி, ராம்நகரின் சாமுண்டீஸ்வரி கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன், கட்சித் தொண்டர்களுடன், நேற்று சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று, சிறப்பு வழிபாடு செய்தார்.
துணை முதல்வர் சிவகுமார், விரைவில் முதல்வராக வேண்டும் என, பிரார்த்தனை செய்தனர். பின் இக்பால் ஹுசேன் அளித்த பேட்டி:
ராம்நகரில் சக்தி தேவதை சாமுண்டீஸ்வரியின் மஹோற்சவம் நடக்கிறது.
இது அனைத்து சமுதாயங்களுக்கும், அமைதியின் அடையாளமாக விளங்கும் திருநாளாகும், அனைத்து மதத்தினரும் சேர்ந்து கரக உற்சவம் நடத்துகிறோம்.
இதன் மூலம், 'நாம் ஒன்றுதான்' என்ற சமத்துவத்தை உணர்த்துகிறோம்.
துணை முதல்வர் சிவகுமார், கட்சிக்காக பாடுபட்டவர். கட்சியை பலப்படுத்தியவர். அவர் முதல்வராக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்காதா? அவர் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. எனவே கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்.
மைசூருக்கு தசரா திருவிழாவை போன்று, ராம்நகருக்கு சாமுண்டீஸ்வரி தேவியின் கரக திருவிழா. மக்களை காக்கும் தேவியின் கரக உற்சவத்தை விமரிசையாக நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.