உ.பி.,யில் தனியார் பஸ் - லாரி மோதி விபத்து; 8 பேர் பரிதாப பலி
உ.பி.,யில் தனியார் பஸ் - லாரி மோதி விபத்து; 8 பேர் பரிதாப பலி
ADDED : ஏப் 28, 2024 05:43 PM

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் தனியார் பஸ் மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியில் தனியார் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பங்கர்மா பகுதியில் இருந்து உன்னாவ் நோக்கி வந்த தனியார் பஸ், ஜமால்திபூர் கிராமம் அருகே வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் தனியார் பஸ் வேகமாக வந்ததே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

