நகை வியாபாரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் கூலிப்படை அட்டூழியம்
நகை வியாபாரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் கூலிப்படை அட்டூழியம்
ADDED : அக் 20, 2024 11:05 AM

மும்பை: புனே நகை கடை வியாபாரியிடம் லாரன்ஸ் பிஷ்னோய் கூலிப்படையினர் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலைக்கு சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த சூழலில், இன்று(அக்.,20) புனேவில் பிரபல நகை வியாபாரி ஒருவருக்கு பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ரூ.10 கோடி தராவிட்டால் கொன்றுவிடுவோம் என நகைக்கடை வியாபாரிக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இது குறித்து போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த அச்சுறுத்தல் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகைக்கடை வியாபாரி பெயர் உள்ளிட்ட எந்த தகவலும் போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.