ADDED : ஜூலை 08, 2024 06:35 AM

ராம்நகர்: ''சென்னப்பட்டணா மக்களை பாதுகாக்க தகுதியான நபர் தேவை,'' என்று, ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் கூறியுள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை, ஒரு சமூகத்தின் வாக்காளர்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. அனைத்து சமூகத்தின் வேட்பாளர்கள் ஓட்டு போட்டால் தான் வெற்றி பெற முடியும்.
சென்னப்பட்டணா தொகுதியை வளர்ச்சி அடைய வைக்கும் பொறுப்பு, தொகுதி மக்கள் அனைவருக்கும் உள்ளது. இதற்கு முன்பு சென்னப்பட்டணா எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், தொகுதி மக்களைப் பற்றி கவலைப்பட்டது இல்லை.
கொரோனா நேரத்தில் இந்த மக்களை பாதுகாக்க வரவில்லை. சென்னப்பட்டணா மக்களுக்கு அன்பு, பாதுகாப்பு கொடுக்கும் நபர் எம்.எல்.ஏ., ஆக வேண்டும்.
மக்களை பாதுகாக்க தகுதியான நபர் தேவை. சட்டசபை தேர்தலில் ராம்நகரில் அனைத்து சமூகத்தினரும் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற வைத்தனர்.
சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். தகுதியான நபருக்கு தான் சீட் கிடைக்கும். யார வேட்பாளராக அறிவித்தாலும் அவரது வெற்றிக்கு நான் உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.