UPDATED : மார் 22, 2024 11:36 AM
ADDED : மார் 22, 2024 09:43 AM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (மார்ச் 21) கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து டில்லியின் முக்கிய வீதிகளில் ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலரை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அகற்றினர்.
இவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவரை சந்தித்து ஆறுதல் கூற காங்., எம்.பி., ராகுல் கோர்ட்டுக்கு செல்வார் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
போராட்டம் நடத்த திட்டம்
கெஜ்ரிவால் கைதை கண்டித்து போராட்டம் நடத்த ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்பாட்டம் , தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ஏதும் வன்முறை நடக்காமல் தடுக்க டில்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் குடும்பத்தினரை அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

