மழை எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு:15 வயது விஞ்ஞானி சாதனை
மழை எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு:15 வயது விஞ்ஞானி சாதனை
ADDED : ஆக 17, 2024 11:11 PM

'இன்றைய உலகில் மொபைல் போன் மோகத்தால் மாணவர்கள், தங்களை மறந்து விடுவதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ஆனால், பெலகாவியின் 15 வயது மாணவர், மழை எச்சரிக்கை கருவி உட்பட பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.
பெலகாவி மாவட்டம், ஹிண்டல்கா கிராமத்தைச் சேர்ந்தவர் தந்தை அஜய் சலவாதி, தாய் கவிதா. அப்பலோ மருந்தகத்தில் தந்தை பணியாற்றி வருகிறார். தாய், மெஸ் நடத்தி வருகிறார். இவர்களின் மகன் அஸ்வஜித் சலவாதி, 15. கே.எல்.இ., இன்ஸ்டிடியூஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே வீட்டில் இருக்கும் மொபைல் சார்ஜர், டிவி ரிமோட், மிக்சர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பிரித்து சரி செய்யும் திறமை கொண்டிருந்தார்.
இது தொடர்பாக மாணவர் அஸ்வஜித் கூறியதாவது:
வீட்டில் பொருட்கள் ஏதாவது பழுதாகிவிட்டால், தந்தை அதை பழுது செய்ய கடைக்கு கொண்டு செல்வார். அவருடன் நானும் செல்வேன். அவற்றை சரிசெய்வதை பார்த்து, நானே, வீட்டில் செய்து பார்ப்பேன். நாளடைவில் அதை தொடர்ந்து செய்ய துவங்கினேன்.
'டிசி மோட்டார், அலுமினியம் பிளாக் பேப்பர், 6 - 12 வோல்ட் பேட்டரி ஆகியவற்றை பயன்படுத்தி, வெளியே மழையில் இருந்து துணிகளை பாதுகாக்க கருவியை கண்டுபிடித்துள்ளேன்.
1துணியை உலர வைத்த பின், நாம் வெளியே சென்றாலோ அல்லது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, மழை பெய்தால், 'அலுமினியம் பிளாக் பேப்பர்' மீது விழும் மழைத்துளியால், ஸ்டீல் பைப்பில் காய வைக்கப்பட்டுள்ள துணி, தானாக மடங்கி உள்ளே சென்றுவிடும். மழை நின்ற பின், அலுமினியம் பிளாக் பேப்பர் காய்ந்த பின், மீண்டும் மடங்கிய பைப், வெளியே வரும்.
2பூத்கண்ணாடி, மொபைல் ஸ்டாண்ட், அட்டை பெட்டியை பயன்படுத்தி 'குறைந்த விலையில் புரொஜெக்டர் கண்டுபிடித்துள்ளேன். மேலும், செம்புக் கம்பி, டிசி கம்பி, சேதமடைந்த குளூ கன் எனும் பசை துப்பாக்கியை பயன்படுத்தி, 'ஹாட் கட்டர்' தயாரித்துள்ளேன்.
3ஆம்ப்லிபவர், சோலார் ப்ளே, 12 வோல்டு எல்.இ.டி., பல்ப் பயன்படுத்தப்படுகிறது. விளக்கின் ஒளியில் இருந்து வரும் சத்தம், சோலார் தகட்டின் மீது படும்போது, அதில் இருந்து வரும் ஒளியால் வெளிப்படும் ஒலி, ஸ்பீக்கர் மூலம் வெளியாகும்.
4வைண்டிங் ரீப்ளேஸ்டு மாட்டார், பி.வி.சி., பைப், ஸ்விட்ச், 3 மி.மீ., கம்பி ஆகியவையை பயன்படுத்தி, கட்டுமானத்தின்போது இரும்பு பொருட்களை வெட்டப்படும் சிறு கை கிரைண்டரை தயாரித்துள்ளேன். இதை வீட்டில் உள்ள இரும்பு பொருட்களை வெட்டவும் பயன்படுத்தலாம். வீட்டுக் கத்தி, கத்திரிக்கோல் மற்றும் கூர்மையான ஆயுதங்களை 'சானம்' பிடித்துக் கொள்ளலாம்.
என் கண்டுபிடிப்புகளை பார்த்து, பள்ளியின் என்னை 'சோட்டா விஞ்ஞானி' என்று அழைக்கின்றனர். அது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள் தரும் உத்வேகத்தால், பலவற்றை கண்டுபிடித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அஸ்வஜித் தாய் கவிதா கூறுகையில், ''அஸ்வஜித்துக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவருக்கு அனைத்து விதமான ஊக்கமும் அளிக்க தயாராக உள்ளோம். அவரது கண்டுபிடிப்புக்கு எங்களால் முடிந்த பண உதவி செய்து வருகிறோம். அரசு ஆதரவு அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
� பி.வி.சி., பைப், பிளேட் மூலம் கத்தியை சானம் பிடிக்கும் கருவி. � வெயில் அடிக்கும்போது காயும் துணிகள். � அலுமினியம் பிளாக் பேப்பர் மீது அழுத்தும்போது, ஸ்டீல் பைப் உள்ளே சென்றுவிடுகிறது.
- நமது நிருபர் -

