ADDED : ஆக 10, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியின் சில இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மத்திய, தெற்கு மற்றும் வடக்கு டில்லியின் சில பகுதிகளில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது.
பிரீத் விஹார், ஐ.டி.ஓ., அக்ஷர்தாம் ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. மழைநீர் சாலைகளில் தேங்கியதால் போக்குவரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
அதிகபட்ச வெப்பநிலை நேற்று 34 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது.
காற்றின் தரக் குறியீடு 59ஆக பதிவாகியிருந்தது. இது திருப்தியாக நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

