இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது: பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்கிறார் ஆந்திரா முதல்வர்!
இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது: பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்கிறார் ஆந்திரா முதல்வர்!
ADDED : அக் 25, 2025 12:13 PM

புதுடில்லி: ''இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது. பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்'' என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; பீஹாரில் வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்வார். சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் அவர்களின் நலன்களுக்காக பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில், மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து வருகின்றன.
2000ம் ஆண்டு முதல் பிரதமர் அரசியலில் இருக்கிறார். அவர் எப்போதும் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார். முன்னதாக, அவர் குஜராத் முதல்வராக இருந்தார். 2014 முதல், 11 ஆண்டுகள் அவர் பிரதமராக இருக்கிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் அவர் பிரதமராக இருப்பார்.
இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது. அவருக்கு சொந்தமானது என்றால், அது தானாகவே இந்தியர்களுக்கு சொந்தமானது.
எந்தவொரு நாட்டின் தனிநபர் வருமானமும் அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. ஆந்திராவில் 15 மாதங்களில் மாநில அரசு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை திரட்ட முடிந்தது, மேலும் ரூ.5 லட்சம் கோடி முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

