UPDATED : மார் 29, 2024 12:20 AM
ADDED : மார் 29, 2024 12:16 AM

ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் (5), கேப்டன் சஞ்சு சாம்சன் (15), பட்லர் (11) சோபிக்கவில்லை. ராஜஸ்தான் அணி 36 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.
முதல் 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்திருந்த ராஜஸ்தான் அணி, பின் எழுச்சி கண்டு கடைசி 10 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன் விளாசியது. முடிவில், 20 ஓவரில் 185/5 ரன் குவித்தது.
186 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய டில்லி அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி 12 ரன்னில் வெற்றி பெற்றது. டில்லி அணியில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்னும் ஸ்ட்ப்ஸ் ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் எடுத்தனர். மார்ஷ் 23 ரன்களும் ரிஷப் பந்த் 28 ரன்களும் எடுத்தனர். அக்ஷர் படேல் 15 ரன்கள் எடுத்தார். ஆனால் தேவையான இலக்கை எட்டமுடியாமல் 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். ராஜஸ்தான் அணியின் பர்ஜர் மற்றும் சஹால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

