ADDED : ஜூலை 12, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடும் முதுகுவலி காரணமாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்,73, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, கடும் முதுகுவலி ஏற்பட்டதால் நேற்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று தனி வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.
தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அறுவைச்சிகிச்சை நிபுணர் அமோல் ரஹேஜாவின் நேரடி கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆந்திராவில்லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும், இதேபோல் கடும் முதுகுவலியால் ராஜ்நாத் சிங் அவதிப்பட்டார்.

