ராஜ்யசபா தேர்தல்: அபிஷேக் சிங்விக்கு மீண்டும் வாய்ப்பு
ராஜ்யசபா தேர்தல்: அபிஷேக் சிங்விக்கு மீண்டும் வாய்ப்பு
ADDED : ஆக 15, 2024 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : தெலுங்கானா, ஒடிசா உட்பட ஒன்பது மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு, செப்., 3ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், காங்., ஆளும் தெலுங்கானாவில் காலியாக உள்ள ஒரு இடமும் அடங்கும்.
இந்நிலையில், தெலுங்கானாவில் நடக்கும் இடைத்தேர்தலில், காங்., சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி போட்டியிடுவார் என, அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று அறிவித்தார்.