UPDATED : ஆக 31, 2025 07:44 AM
ADDED : ஆக 31, 2025 07:35 AM

எதிர்க்கட்சிகள் என்றாலே ஆளுங்கட்சி என்ன கூறினாலும், அதை எதிர்ப்பதுதான் என ஆகிவிட்டது. ஆனால், ஒரு விஷயத் தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, இரண்டு அணிகளுமே ஒற்றுமையாக உள்ளன.
இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த நாள், பழங்குடி யினத்தின் தலைவரும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியவருமான ஜார்க்கண்டின் பிர்சா முண்டா, 150வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 100வது பிறந்த நாள் என, மூன்று விழாக்களை நடத்த மத்திய அரசு சார்பில் மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று கமிட்டிகளுக்கும் தலைவர் பிரதமர் மோடி. படேல், 150வது பிறந்த நாள் கொண்டாட்ட குழுவில், 124 உறுப்பினர்கள் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள், சீனி யர் மத்திய அமைச்சர்கள், சித்தராமையா, ஸ்டாலின், ஒமர் அப்துல்லா, ரேவந்த் ரெட்டி உட்பட 21 முதல்வர்கள் உள்ளனர்.
பிர்சா முண்டா விழா கொண்டாட்ட குழு வில், 118 பேர் உள்ளனர். முன்னாள் ஜனாதி பதிகள், 20 கவர்னர்கள், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பினராயி விஜயன் உட்பட 20 முதல்வர்கள் இந்த குழுவில் அடக்கம்.
வாஜ்பாய், 100வது பிறந்த நாள் விழாக் குழுவில் 124 பேர் உள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதிகள், 19 கவர்னர்கள், மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உட்பட, 17 முதல்வர்கள் உள்ளனர்.
நாட்டின் சிறந்த தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாட, இப்படி அனைத்து தரப்பு கட்சியினரும், ஒன்றாக இணைந்திருப்பது, நம் நாட்டின் ஜனநாயக அமைப்பு எப்படி சிறப்பாக உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு!