பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு : இன்று மசோதா நிறைவேற்றம்
பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு : இன்று மசோதா நிறைவேற்றம்
ADDED : செப் 03, 2024 02:42 AM

கோல்கட்டா: மேற்குவங்கம், கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 நாட்களாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மேற்குவங்க சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று துவங்கியது. இதில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா கொண்டு வரப்பட்டது. இரண்டாம் நாளான இன்று மசோதா மீது விவாதம் நடத்திய பின் நிறைவேற்றப்பட உள்ளது.