ADDED : மார் 05, 2025 11:26 PM

கேரளாவில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உதவுவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். ராகுல் இதுவரை பா.ஜ.,வுடன் எங்கே சமரசம் செய்து கொண்டார்? காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி அரசை பாசிஸ்ட் என்று அழைக்கும் போது, மார்க்சிஸ்டுகள் பாசிஸ்ட் இல்லை என்கின்றன.
சதீஷன்,கேரள எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
இந்தியாவில் வாழலாமா?
சமாஜ்வாதி கட்சியின் மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி, சத்ரபதி சிவாஜியின் ஆட்சி குறித்து வெட்கப்படுவதாகவும், முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பை நாயகனாக கருதுவதாகவும் கூறியுள்ளார். இது போன்ற நபர்கள் இந்தியாவில் வாழலாமா? அவரை உ.பி., அனுப்பி வையுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
குறுகிய புத்தி!
கடந்த 30 ஆண்டுகளாக ஒடிசாவில் பிஜு பட்நாயக்கின் பிறந்த நாளான மார்ச் 5, பஞ்சாயத்து ராஜ் தினமாக அனுசரிக்கப்பட்டது. ஆனால், தற்போது பா.ஜ., அரசு இந்த நடைமுறையை கைவிட்டு, ஏப்ரல் 24ம் தேதிக்கு அதை மாற்றியுள்ளது. இது, அவர்களின் குறுகிய புத்தியையும், முதிர்ச்சியற்ற அரசியலையும் காட்டுகிறது.
நவீன் பட்நாயக், தலைவர், பிஜு ஜனதா தளம்