sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் வருகை பதிவேட்டில் தளர்வு

/

மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் வருகை பதிவேட்டில் தளர்வு

மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் வருகை பதிவேட்டில் தளர்வு

மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் வருகை பதிவேட்டில் தளர்வு


ADDED : மார் 07, 2025 11:03 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ஒலிம்பிக் -2028ல் கர்நாடகாவை சேர்ந்த தகுதியான 60 விளையாட்டு வீரர்களுக்கு 'ஒலிம்பிக் பதக்கம் இலக்கு' திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக, தலா 6 கோடி ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு

 பெங்களூரு ஆதிநாராயண ஹொசஹள்ளியில், 20 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட விளையாட்டு மைதானம்; சைக்கிள் விளையாட்டை ஊக்குவிக்க, சைக்கிள் பாதை அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு மைதானம் கட்ட தலா 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 தாலுகா விளையாட்டு மைதானம் கட்ட, 12 தாலுகாக்களில் தலா 2 கோடி ரூபாய் வீதம் நடப்பாண்டு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 அடுத்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தின் 4 பிரிவு தலைமையகங்களின், மாவட்ட மைதானங்களில் துப்பாக்கி சூடுதல் மைதானங்கள் கட்ட 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 கர்நாடகாவின் கிராமப்புற விளையாட்டுகளான கம்பாலா, மல்லகம்பா ஊக்குவிக்கப்படும். மிகவும் பின்தங்கிய வனப்பகுதி பழங்குடியினருக்கு ஆண்டுதோறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்த மானியமாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 மைசூரு, பெலகாவியில் இரண்டு புதிய விளையாட்டு அறிவியல் மையம் அமைக்க, 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 வெப்பமூட்டும் மற்றும் டைவிங் குளம் போன்று பெங்களூரு வித்யா நகரில் உள்ள நீச்சல் குளம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். சாம்ராஜ் நகரில் ஒலிம்பிக் தரத்தில் 50 மீட்டர் நீளத்தில் நீச்சல் குளம் கட்ட 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 மைசூரில் குஸ்தி, வாலிபால், கோகோ அகாடமிகள் அமைக்க தலா 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு

 மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு 15 சதவீதமும்; சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் (தொழில்முறை கல்லுாரிகள் உட்பட) கட்டாய வருடாந்திர வருகைப் பதிவில் 25 சதவீதம் தளர்வு வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள், பயிற்சியில் பங்கேற்க வசதியாக இருக்கும்

 மஹாத்மா காந்தி தேசிய ரூரல் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துடன் இணைந்து, 100 பள்ளிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாயில் விளையாட்டு மைதானம் கட்டப்படும்

 ஓய்வு பெற்ற சர்வதேச குஸ்தி விளையாட்டு வீரர்களுக்கு 6,000 ரூபாயும்; தேசிய அளவிலான வீரர்களுக்கு 5,000 ரூபாயும்; மாநில அளவிலான வீரர்களுக்கு 4,500 ரூபாயும் பென்ஷன் தொகை உயர்த்தப்படும்

 ஒலிம்பிக், காமன்வெல்த் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றோர், விளையாட்டு துறைகளில் பயிற்சி பெறுவோருக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us