கட்சி தோற்றால் ராஜினாமா காங்., - எம்.எல்.ஏ., சவால்
கட்சி தோற்றால் ராஜினாமா காங்., - எம்.எல்.ஏ., சவால்
ADDED : மார் 23, 2024 06:53 AM

தாவணகெரே: ''தாவணகெரே லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தோற்றால், எம்.எல்.ஏ., பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்,'' என சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா சவால் விடுத்தார்.
தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:
பா.ஜ.,வினருக்கு தைரியம் இருந்தால், அனைவரும் ஒற்றுமையாக வந்து பிரசாரம் செய்து, தங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நாளை காங்கிரஸ் வெற்றி பெற்ற பின், தங்களுக்குள் அதிருப்தி இருந்தது; இதனால் தோற்றதாக காரணம் கூறாதீர்கள்.
தாவணகெரே லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. தோல்விக்கு என்ன காரணங்களை கூறலாம் என, பா.ஜ.,வினர் இப்போதே ஆலோசிக்கட்டும். ஒருவேளை தோற்றால், எம்.எல்.ஏ., பதவியை நான் ராஜினாமா செய்வேன்.
தாவணகெரே பா.ஜ.,வில் அதிருப்தி உள்ளதாக, தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இப்போதும் நான் சவால் விடுகிறேன்.
பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற வைக்கட்டும் பார்க்கலாம். காங்கிரஸ் வேட்பாளர் தோற்றால், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே நான் ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.

