ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு; பஞ்., அலுவலகம் முன் தர்ணா
ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு; பஞ்., அலுவலகம் முன் தர்ணா
ADDED : ஆக 16, 2024 10:55 PM
பேத்தமங்களா : 'ஏரியில் மண் எடுக்க அனுமதிக்க கூடாது' என, என்.ஜி.ஹுல்கூர் கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன் கிராமத்தினர் தர்ணா நடத்தினர்.
பேத்தமங்களா அருகே பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிக்காக அனுமதி இல்லாமல் என்.ஜி.ஹுல்கூர் ஏரியில் இருந்து மண் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படுத்துகிறது. எனவே, என்.ஜி. ஹுல்கூர் கிராம பஞ்சாயத்து ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க கூடாதென்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக, கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன் நேற்று தர்ணா நடத்தினர்.
பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சுனில்குமார் கூறுகையில், ''என்.ஜி.ஹுல்கூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒன்பது ஏரிகளில் 20 முதல் 30 அடி ஆழம் வரை மண் எடுத்துள்ளனர். ஏரி பக்கத்திலேயே பெங்களூரு -- சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை வருவதால் ஏரிக்கரையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டு ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஏரிக்கரையில் மண் எடுக்க அனுமதிக்கக் கூடாது,'' என்றார்.
பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் கிராமத்தினர், விவசாயிகள் புகார் அளித்தனர். மண் எடுப்பதை தடுக்காவிட்டால் கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து போராட்டம் நடத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

