வழக்குகளை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் ரேவண்ணா மனு
வழக்குகளை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் ரேவண்ணா மனு
ADDED : மே 29, 2024 05:50 AM

பெங்களூரு : தன் மீது பதிவான, வேலைக்காரப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை, பெண் கடத்தல் ஆகிய இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவர் மீது வீட்டு வேலைக்காரப் பெண், பாலியல் புகார் அளித்தார். அதன்பேரில் ஹொளேநரசிபுரா போலீசில் வழக்குப்பதிவானது.
மைசூரு கே.ஆர்., நகரை சேர்ந்த பெண்ணை கடத்தியதாக, ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில் பாலியல் தொல்லை, பெண் கடத்தல் வழக்குகள் அரசியல் காரணங்களுக்காக, தன் மீது தொடரப்பட்டது. எனவே, இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத்தெரிகிறது.
இதற்கிடையில் பெண் கடத்தல் வழக்கில், ரேவண்ணாவுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி, சிறப்பு புலனாய்வு குழு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது 31ம் தேதி விசாரணை நடக்கிறது.