ADDED : மே 28, 2024 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஜியாபாத்:புதுடில்லி அருகே, பெட்ரோல் பங்க் ஊழியரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 9.50 லட்சம் கொள்ளை அடித்தவரை போலீசார் தேடுகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் ராஜ்நகர் விரிவாக்கத்தில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் கணக்காளர் மயங்க் கவுர். நேற்று முன் தினம், பங்க்கில் வசூலான 9.50 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்ய ஸ்கூட்டரில் சென்றார்.
ரிங் ரோட்டில், ஸ்கூட்டரை வழிமறித்த இருவர் துப்பாக்கி முனையில் பணம் இருந்த பையை மயங்க்கிடம் இருந்து பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, மயங்க் கவுர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.