ADDED : ஏப் 16, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தார்வாட் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
தார்வாட், குந்த்கோளின் ராமனகொப்பா கிராமத்தில் வசிக்கும் நிங்கப்பா என்பவரின் வீட்டில் தேர்தல் செலவுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைத்துள்ளதாக, தகவல் வெளியானது.
எனவே வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசார் நேற்று மாலை, நிங்கப்பா வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். 2 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்துக்கு சரியான ஆவணங்கள் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிங்கப்பாவிடம் விசாரிக்கின்றனர்.

