ADDED : ஜூலை 25, 2024 10:58 PM
கதக்: அரசு வேலை வாங்கி தருவதாக 39 பேரிடம் 3.30 கோடி ரூபாய் மோசடி செய்த ஆறு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
கதக் டவுனில் வசிப்பவர் நாகபூஷன், 34. இவர் அரசு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டார். இதுபற்றி அறிந்த உறவினர் ஆனந்தேஸ்வர், 36 என்பவர், நாகபூஷனிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 70 லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் மோசடி செய்தார்.
இதுகுறித்து கதக் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் ஆனந்தேஸ்வர் மீது நாகபூஷன் புகார் செய்தார். இதன்படி, ஆனந்தேஸ்வர், அவரது மனைவி நிதி, 32, ஜான் டிசோசா, 37, லவீனா டிசோசா, 36, மகேந்திரா, 35, ராகேஷ், 36 ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் கதக், தார்வாட், பாகல்கோட், கொப்பால் ஆகிய மாவட்டங்களில் 38 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக 3.30 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

