காவிரி நீரில் கார் கழுவிய மூவருக்கு ரூ.5,000 அபராதம்
காவிரி நீரில் கார் கழுவிய மூவருக்கு ரூ.5,000 அபராதம்
ADDED : மார் 25, 2024 06:52 AM

பெங்களூரு: தண்ணீர் பிரச்னை இருக்கும் போது பெங்களூரில் தங்களின் கார்களை கழுவ, காவிரி நீரை பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாயை, பெங்களூரு ஜல் மண்டல் நிறுவனம் அபராதமாக விதித்துள்ளது.
'கடந்தாண்டு மழையின்மையால், அனைத்து அணைகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். கார்கள் கழுவவும், வீட்டின் பூந்தோட்டத்துக்கு பயன்படுத்த கூடாது' என்று பெங்களூரு மாநகராட்சி மற்றும் பெங்களூரு ஜல்மண்டல் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளன.
ஆனால் பொது மக்கள் சிலர், அதை எதையும் தங்கள் கவனத்தில் வைத்து கொள்வதில்லை. இந்நிலையில், சதாசிவ நகர், மஹாதேவபுரா, டாலர்ஸ் காலனியில் தங்கள் கார்களை காவிரி நீரில் கழுவிக் கொண்டிருந்த பெண் உட்பட மூவருக்கு தலா 5,000 ரூபாயை, ஜல்மண்டல் நிறுவன அதிகாரிகள் அபராதமாக விதித்துள்ளனர்.

