ADDED : ஆக 14, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போபால், :மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள கல்லுாரிகளில் பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் எழுதியுள்ள புத்தகங்களை சேர்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்த புத்தகங்களை பாடத்திட்டங்களில் சேர்ப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுரேஷ் சோனி, தீனானாத் பத்ரா, அதுல் கோத்தார், தேவேந்திர ராவ் தேஷ்முக், சந்தீப் வால்சேகர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் எழுதியுள்ள, 88 புத்தகங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களை வாங்குவதற்கு, மாநில உயர்க்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.