அடுத்த தலைமுறை அணு எரிபொருள்: இந்தியாவுக்கு வழங்கும் ரஷ்யா
அடுத்த தலைமுறை அணு எரிபொருள்: இந்தியாவுக்கு வழங்கும் ரஷ்யா
ADDED : மே 24, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாஸ்கோ: நம் அணுசக்தி கமிஷனின் தலைவர் அஜித் குமார் மோஹான்தி, ரஷ்யா சென்றுள்ளார். அங்குள்ள செர்பியாவின் டாம்ஸ்க் பகுதியில் ரஷ்ய அணுசக்தி கழகத்தின் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவை சந்தித்தார்.
அப்போது, ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா அணுசக்தி துறையில் அளித்து வரும் ஒத்துழைப்பை பாராட்டினார்.
அப்போது அலெக்ஸி லிகாச்சேவ் கூறியதாவது:
அணுசக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை தீவிரமாக விரிவுபடுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இதில் முதலாவதாக, இந்தியாவில் புதிய இடத்தில், ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட அதிக திறன் உடைய அணுசக்தி அலகுகளின் தொடர் கட்டுமானம் நடக்கும். அடுத்த தலைமுறை அணு எரிபொருள் மிக விரைவில் இந்தியாவுக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.