
தமிழக எல்லையில் உள்ளது சாம்ராஜ் நகர் - தனி தொகுதி. இதனால், ஹனுார், கொள்ளேகால், குண்டுலுபேட், சாம்ராஜ் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர்.
தமிழர்களின் ஓட்டு இல்லாமல், சட்டசபை, லோக்சபா தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாது. இத்தொகுதியில் இதுவரை நடந்த 17 தேர்தல்களில், காங்கிரஸ் - 11, ஜனதா தளம் - 2, இந்திரா காங்கிரஸ், ஒருங்கிணைந்த ஜனதா தளம், ம.ஜ.த., மற்றும் பா.ஜ., தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத், 1980, 1984, 1989, 1991, 1999 ஆகிய ஐந்து முறை காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்துள்ளார். 2019ல் பா.ஜ.,வில் இணைந்து ஆறாவது முறையாக எம்.பி.,யானார். வயது முதிர்வால், தேர்தல் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
ஹனுார், கொள்ளேகால் - தனி, சாம்ராஜ் நகர், குண்டுலுபேட், டி.நரசிபுரா - தனி, நஞ்சன்கூடு - தனி, ஹெச்.டி,கோட் - எஸ்.டி., வருணா ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இம்முறை பா.ஜ., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., பால்ராஜ், காங்கிரஸ் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவின் மகன் சுனில் போஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
................................
சீனிவாச பிரசாத், பா.ஜ.,
பார்லிமென்டில் தற்போதைய எம்.பி., பங்களிப்பு
வருகை பதிவு 33%
பங்கெடுத்த விவாதம் 0
எழுப்பிய கேள்விகள் 2
................................
மொத்த வாக்காளர்கள் 17,68,555
ஆண்கள் 8,74,183
பெண்கள் 8,94,268
மூன்றாம் பாலினத்தவர் 104
................................
லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதம்
2014: 72.85%
2019: 75.35%
................................
2014 தேர்தலில் முதல் மூன்று இடங்கள்
................................
துருவநாராயணா, காங்.,
ஓட்டுகள்: 5,67,782
கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.,
ஓட்டுகள்: 4,26,600
கோட்டே சிவண்ணா, ம.ஜ.த.,
ஓட்டுகள்: 58,760
................................
2019 தேர்தலில் முதல் மூன்று இடங்கள்
................................
சீனிவாச பிரசாத், பா.ஜ.,
ஓட்டுகள்: 5,68,537
துருவநாராயணா, காங்.,
ஓட்டுகள்: 5,66,720
சிவகுமாரா, பகுஜன் சமாஜ்,
ஓட்டுகள்: 87,631
................................
முக்கிய பிரச்னைகள்:
* பண்டிப்பூர் புலிகள் காப்பகம் உட்பட சுற்று வட்டார பகுதிகள் வனமாக உள்ளதால், அடிக்கடி மனிதர்கள் மீது வன விலங்குகள் தாக்குதல் நடக்கின்றன. மக்களும் விலங்குகளை வேட்டையாடுகின்றனர்
* பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தும், மேம்படுத்தாமல் இருப்பதால், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளது
* கரும்பு, நெல் விவசாயிகளுக்கு ஆதரவு விலையை அதிகப்படுத்தும்படி நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்
* லட்சக்கணக்கான தமிழர்கள் இருந்தும், உரிய அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கின்றனர்
* தமிழகம், கேரளா மாநிலங்களை இணைப்பதால், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் என மக்கள் சென்று வருவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்
* வறட்சி காலங்களில் டி.நரசிபுரா சங்கமத்தில், தண்ணீர் குறைந்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்
* தொழில் வளர்ச்சி முற்றிலும் இல்லை என்பதால், இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர்
* குறுகியதாக இருக்கும் மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும்படி பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.
................................
படங்கள்
................................
2024 பிரதான கட்சி வேட்பாளர்களின் விபரம்
படம்: 2_Balraj Chamrajnagar BJP
பால்ராஜ் - வயது: 56
பா.ஜ.,
* பலம்:
கொள்ளேகால் தொகுதியில், 2004ல் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக இருந்த இவர், காங்கிரசில் இணைந்தார். கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் காங்., வாய்ப்பு தராததால், பா.ஜ.,வில் இணைந்து, தற்போது லோக்சபா சீட் பெற்றுள்ளார்.
* பலவீனம்:
கட்சியின் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு தரப்படாததால், தொகுதி பிரமுகர்களிடையே அதிருப்தி உள்ளது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளதாக பேசப்படுகிறது.
................................
படம்: 2_Sunil Bose Chamrajnagar Cong
சுனில் போஸ்
வயது: 34
காங்.,
* பலம்: சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவின் மகன் என்ற சாயம். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, பல்வேறு அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பொருளாதாரத்துக்கு குறைவு இல்லை. முதல்வர் தனி கவனம் செலுத்தியிருப்பது கூடுதல் பலம்.
* பலவீனம்:
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல், அமைச்சரின் வாரிசுக்கு சீட் வழங்கியிருப்பதால், தலைவர்களின் அதிருப்தி. தனிப்பட்ட அளவில் மக்களிடையே எந்த விதமான தொடர்பும் இல்லை. தந்தையை நம்பியுள்ளார்.
***
- நமது நிருபர் -

