ADDED : ஏப் 08, 2024 04:50 AM

பாகல்கோட்: ''எனக்கு எம்.பி.,யாகும் யோகம் வந்துள்ளது. வரும் நாட்களில் பிரதமரும் ஆவேன்,'' என பாகல்கோட் காங்கிரஸ் வேட்பாளர் சம்யுக்தா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் கூறியதாவது:
என்னுடையது கஜகேசரி யோகம். இப்போது எனக்கு எம்.பி.,யாகும் வாய்ப்பு வந்துள்ளது. வரும் நாட்களில் நான், இந்த நாட்டின் பிரதமரானாலும் ஆகலாம். நான் பிறந்த போதுதான் என் தந்தை எம்.எல்.ஏ., வானார். இப்போது பாகல்கோட்டில் போட்டியிடுகிறேன்.
நான் சிறுமியாக இருந்த போது, எதிர் காலத்தில் என்ன ஆவாய் என, கேட்ட போது பிரதமராவேன் என, கூறினேன். தற்போது மக்கள் என்னை வெற்றி பெற வைப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்குகிறோம். ஆண்களுக்கு ஏன் கொடுப்பதில்லை என்றால், இவர்களுக்கு பணம் செலுத்தினால், மாலையில் எந்த கடைக்கு செல்வர் என்பது, எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

