ADDED : ஆக 14, 2024 08:26 PM

சண்டிகர், :சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவருமான சுக்விந்தர் குமார் சுகி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று சேர்ந்தார்.
டாக்டரான சுக்விந்தர் குமார் சுகி, 2017ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பங்கா தொகுதியில் இருந்து சிரோமணி அகாலி தளம் கட்சி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே தொகுதியில் 2022ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
ஆனால், 2023ல் ஜலந்தர் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பஞ்சாப் சட்டசபையில் உள்ள 117 இடங்களில் சிரோமணி அகாலி தளத்துக்கு 3 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருந்தனர். இப்போது - சுகி விலகியதால், இரண்டு பேர்தான் இருக்கின்றனர்.
ஆம் ஆத்மியில் சேர்ந்துள்ள சுகி, சட்ட ஆலோசனைப் பெற்று அதன்பிறகே எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன் என அறிவித்து உள்ளார்.