ADDED : ஆக 06, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு : பாலக்காடு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக கழுத்தில் சால்வை சிக்கியதில், மாணவன் பரிதாபமாக இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்லடிக்கோடு காராகுறுச்சி பகுதியை சேர்ந்த ஷரபுதீன்- - ரஷிதா தம்பதியரின் மகன் முகமது இர்பான், 12. இவர், அருகில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுதலாக சால்வை கழுத்தில் சிக்கியது. மயங்கி விழுந்த முகமது இர்பானை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பெற்றோர் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.