ADDED : பிப் 24, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே உள்ளது செராடு வனதுர்க்கை அம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும், மாசி மாதம் உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 20ம் தேதி தொடங்கியது.
உற்சவ நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு செண்டை மேளம் முழங்க, மூன்று யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்சீவேலி நடந்தது. 12:00 மணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 5:00 மணிக்கு செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை மீது அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு காழ்ச்சீவேலியோடு உற்சவம் நிறைவு பெற்றது.