ADDED : ஆக 21, 2024 09:49 PM

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் சரத்சந்திரபவார் தேசிவாத காங்.,கட்சி தலைவர் சரத்பவாருக்கு ‛‛இசட்'' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், மிகவும் பிரபலமானவர்களுக்கு ஏதேனும் உயிர் அச்சறுத்தல் இருப்பின், சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதைடுத்து மஹாராஷ்டிரவின் மூத்த அரசியல் தலைவரும், சரத்சந்திரபவார் தேசியவாத காங்., கட்சி தலைவருமான சரத்பவார்,83 உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலின் படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி அவருக்கு ‛‛ இசட்'' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவருக்கு55க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய சி.ஆர்.பி.எப். , வீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுவர்.