சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது.
அந்த வகையில் சிவபெருமானை வணங்குகையில் அவருக்குரிய மூல மந்திரம் அதை ஜபிப்பது நம் பிராத்தனைக்கு வலிமை சேர்க்கும்.

