சென்னபட்டணாவில் நான் தான் அடித்து சொல்கிறார் சிவகுமார்
சென்னபட்டணாவில் நான் தான் அடித்து சொல்கிறார் சிவகுமார்
ADDED : ஆக 30, 2024 09:58 PM

பெங்களூரு: ''சென்னபட்டணா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நான் தான். 'பி' பார்மும் எழுதுவேன். வேட்புமனுவை நானே தாக்கல் செய்வேன்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி மத்திய அமைச்சரானதால், சென்னபட்டணா தொகுதி காலியானது. இத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
சென்னபட்டணா தொகுதிக்கு, நான் தான் வேட்பாளர். 'பி' பார்ம் நான் தான் எழுதுவேன். எனக்கே மக்கள் ஓட்டு போடுவர். எதிர் தரப்பில் யாரை நிறுத்தினாலும், எனக்கு தான் ஓட்டு போடுவர்.
எனக்கு மக்கள் அதிகாரம் கொடுத்துள்ளனர். அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். எனவே தான் சென்னபட்டணா வேலைவாய்ப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் சென்னபட்டணா செல்லும் ஒவ்வொரு முறையும் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு தொடர்பான நீதிமன்ற விஷயங்கள் அனைத்தும் தெரியாது. தீர்ப்பு வந்தால் மட்டுமே தெரியும். தீர்ப்பு வந்த பின் பேசுவோம்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் மகளுக்கும், காங்கிரஸ் அமைச்சர் பைரதி சுரேஷின் மகனுக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்தத்தில் கவர்னரை சந்தித்தேன். அப்போது கவர்னரிடம் அவரை சந்திக்க நேரம் கேட்டோம்; நேரம் கொடுத்துள்ளார். அவரை விரைவில்சந்திப்போம்.
இவ்வாறு அவர்கூறினார்.