2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியா நடத்துகிறது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியா நடத்துகிறது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
ADDED : செப் 22, 2025 06:35 AM

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும், கிராமோத்சவம் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
தென் மாநில அளவிலான, 17வது கிராமோத்சவ திருவிழா இறுதி போட்டிகள், கோவை, ஆதியோகி முன்பு நேற்று மாலை நடந்தது.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், 17வது ஈஷா கிராமேத்சவம், விளையாட்டு திருவிழா மட்டுமல்ல; பாரதத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கொண்டாட்டம். விளையாட்டில் கிடைப்பது தோல்வியல்ல; அனுபவம். 2036ல் நம் பாரதம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது, என்றார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு நிருபர்களிடம் பேசுகையில், ஈஷா கிராமோத்சவம் மூலம், 35 ஆயிரம் கிராமங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2028ம் ஆண்டுக்குள், 28 மாநிலங்களிலும், கிராமோத்சவம் நடத்தப்படும். நம் நாடு வல்லரசாக வேண்டுமெனில், இளைஞர்களிடம் போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு, விளையாட்டுதான் ஒரே தீர்வு,என்றார்.
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் விளையாட்டு வீராங்கனை வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீரர் பவினா படேல் ஆகியோர் பங்கேற்றனர்.