ADDED : மே 09, 2024 10:26 PM

பெங்களூரு, - ''ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா தவறு செய்திருந்தால் துாக்கில் போடட்டும். ஆனால், முதல்வர் பதவிக்காக, சிவகுமார் அவசர முடிவை எடுக்க கூடாது,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா அறிவுறுத்தினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுகிறார். இந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள, அவர் அவசரப்பட கூடாது. அவசர முடிவுகள் எடுத்தால், அது தலைகீழாகும். இவர் அனைத்து நாற்காலிகளிலும், அமர்ந்து விட்டார்.
முதல்வர் நாற்காலி மட்டும் பாக்கியுள்ளது. இவர் முதல்வராக வேண்டும் என, நானும் நினைத்தேன்.
பிரஜ்வல் ரேவண்ணா தவறு செய்தது உறுதியானால், அவரை துாக்கில் போடட்டும். முன்னாள் பிரதமர் தேவகவுடா மீது எங்களுக்கு பக்தி, அபிமானம் உள்ளது. இவரிடம் நான், சித்தராமையா, சிந்தியா உட்பட பலரும் அரசியல் பயின்றோம்.
தேவகவுடாவின் பேரன் என்பதால், பிரஜ்வல் மீது கருணை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரஜ்வல் விஷயத்தில் சிவகுமார் அவசரம் காண்பிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.