ADDED : செப் 09, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் அழைப்பை ஏற்று, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்க துணை அதிபராக பதவி வகிப்பவர் கமலா ஹாரிஸ்.
இவரது தாய் ஷியாமளா கோபாலன் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நிதியுதவி வழங்கி உள்ளார். எனவே கமலா ஹாரிஸ் குடும்பத்துடன், சிவகுமாருக்கு நல்லுறவு உள்ளது.
நார்த் கரோலினாவில் கமலா ஹாரிஸ் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று சிவகுமார் தன் குடும்பத்துடன், நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டார்.
இதே வேளையில், அமெரிக்காவில் ஜனநாயகம், தேர்தல் தொடர்பான கருத்தரங்கிலும் சிவகுமார் பங்கேற்பார், அதன்பின் சிகாகோவுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.