ADDED : ஏப் 04, 2024 04:00 AM
துமகூரு : வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது, துமகூரு பா.ஜ., வேட்பாளர் சோமண்ணா, டி.எஸ்.பி., இடையில், வாக்குவாதம் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலில் துமகூரு தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் சோமண்ணா, வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று காலை, துமகூரு கலெக்டர் அலுவலகம் வந்தார். அவருடன் ஏற்கனவே நான்கு பேர் உள்ளே சென்றனர். சிறிது நேரத்தில் வெளியே வந்த சோமண்ணா, கலெக்டர் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்தார். அங்கு காரில் வந்த துமகூரு எம்.பி., பசவராஜை வரவேற்றார்.
இந்நிலையில் பசவராஜுடன் காரில் வந்த சிலரும், வேட்புமனு தாக்கல் செய்ய, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை டி.எஸ்.பி., சந்திரசேகர் தடுத்து நிறுத்தினார். இதனால் கோபம் அடைந்த சோமண்ணா, டி.எஸ்.பி., சந்திரசேகரிடம் வாக்குவாதம் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய, வேட்பாளர் உட்பட ஐந்து பேரை மட்டும் தான் அனுமதிக்க முடியும் என, டி.எஸ்.பி., கூறினார். அதை ஏற்க மறுத்த சோமண்ணா, ஆவேசமாக பேசினார். இதனால் பதிலுக்கு சந்திரசேகரும் சத்தமாக பேசினார். அவர்கள் இருவரையும் சக போலீசார், சமாதானம் செய்தனர்.

