sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பவித்ராவுக்கு சிறப்பு சலுகையா?

/

பவித்ராவுக்கு சிறப்பு சலுகையா?

பவித்ராவுக்கு சிறப்பு சலுகையா?

பவித்ராவுக்கு சிறப்பு சலுகையா?


ADDED : ஜூன் 29, 2024 11:13 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''சிறையில் பவித்ரா கவுடாவுக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை,'' என, பவித்ரா கவுடா தரப்பு வக்கீல் நாராயண சாமி தெரிவித்தார்.

ரேணுகாசாமி கொலை வழக்கில், பவித்ரா கவுடா, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைபட்டுள்ளார். இவரை சந்திக்க வக்கீல் நாராயணசாமி, நேற்று மாலை சிறைக்கு வந்தார்.

அவருடன் பேசிவிட்டு வெளியே வந்த பின், வக்கீல் நாராயணசாமி அளித்த பேட்டி:

பவித்ரா கவுடா, நீதிமன்ற காவலில் உள்ளார். இதுபோன்று உள்ளவர்களை, எப்படி நடத்துவார்களோ அப்படித்தான், பவித்ரா கவுடாவையும் நடத்துகின்றனர். இங்கு அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை.

நீதிமன்றக் காவலில் உள்ளவர்கள், இம்சிக்கப்படுவர், கடுமையாக விசாரிக்கப்படுவர் என்பது பொய். குற்றவாளிகளின் மனம் மாறட்டும் என்பதற்காக, காவலில் வைக்கப்படுகின்றனர்.

மற்றவருக்கு அளிக்கும் உணவையே, பவித்ரா கவுடாவுக்கும் அளிக்கின்றனர். ஊடகங்கள் கூறுவதைப் போன்று, அவருக்கு தனி உணவு வழங்கப்படவில்லை. ஜாமின் கிடைக்கும் வரை அல்லது விசாரணை முடியும் வரை, குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் இருப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை வழக்கில் கைதாகி, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நடிகர் தர்ஷனை, நடிகை ரக்ஷிதா ராமும், அவரது கணவரும், இயக்குனருமான பிரேமும் சந்தித்து தைரியம் கூறினர்.

கணவர் சிறைக்குச் சென்றதால், மன வருத்தத்தில் உள்ள தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியை, அவரது தோழியும், பாடகியுமான ஷமிகா மல்நாட், நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின் அவர் அளித்த பேட்டி:

நானும், விஜயலட்சுமியும் நீண்ட காலமாக தோழிகள். ஒன்றாகவே ஆங்கரிங் செய்தோம். எனக்கு தெரிந்தவரை, விஜயலட்சுமி மிகவும் தைரியமான பெண். இவ்வளவு சகிப்புத்தன்மை கொண்ட பெண்ணை, என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை.

நடந்த சம்பவத்தை கேட்டு, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. விஜயலட்சுமியை நினைத்து, மிகவும் வருத்தம் அடைந்தேன்.

அவரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர் தைரியமாகவே இருக்கிறார். தர்ஷன் எந்த தவறும் செய்யவில்லை என, உறுதியாக நம்புகிறார். தர்ஷன் நிச்சயம் வெளியே வருவார் என, கூறினேன்.

புத்திசாலி பெண். கணவருக்காக போராடுகிறார். தர்ஷனின் மகன் வயதில் சிறியவன் என்றாலும், திடமாக இருக்கிறார். விஜயலட்சுமிக்கு இத்தகைய பிரச்னைகள் புதிதல்ல. அவர் சமாளிப்பார்; பல வலிகளை சுமந்தவர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us