சட்டம் ஒழுங்கு நிலை என்ன?: டில்லியில் அமித்ஷா உடன் கவர்னர் ரவி ஆலோசனை
சட்டம் ஒழுங்கு நிலை என்ன?: டில்லியில் அமித்ஷா உடன் கவர்னர் ரவி ஆலோசனை
UPDATED : ஜூலை 17, 2024 01:53 PM
ADDED : ஜூலை 17, 2024 12:11 PM

புதுடில்லி: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்தார். அப்போது இருவரும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.
நமது மக்களை பாதிக்கும் பிரச்னைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும், மக்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது. இவ்வாறு கவர்னர் ரவி
கூறியுள்ளார்.
உயர்கல்வியை உயர்த்த நடவடிக்கை
முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்தார். அப்போது இருவரும் கல்வித்துறையை மேலும் முன்னேற்றுவது மற்றும் தேசிய கல்விக்கொள்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ஆழ்ந்த அக்கறை
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு நன்றி. இவ்வாறு கவர்னர் ரவி கூறியுள்ளார்.