ADDED : ஆக 17, 2024 11:44 PM
கோராக்பூர்: உத்தர பிரதேசத்தில், ஒரு மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள், மாணவர் உட்பட 17 பேரை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் கோரக்பூரின் ஷாபூர் பகுதியில் உள்ள ஆவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த மாணவர் ஆஷிஷ் யாதவ், 22.
இவர், சமீபத்தில் இரவு நேரத்தில் தன் வீட்டின் அருகே மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அங்கு வந்த தெருநாய், அவர் மீது பாய்ந்து தாக்கியது.
மாணவரின் உடல், முகம் உள்ளிட்ட இடங்களில் கடித்து குதறியது.
இதையடுத்து அந்த நாய், வீட்டின் கேட் அருகே நின்றிருந்த பெண் மீது பாய்ந்து தாக்கியது. இதில் அவரது கால் மற்றும் மூட்டில் காயம் ஏற்பட்டது.
பின், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமியரையும் கடித்தது. இவ்வாறு ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 17 பேரை கடித்து குதறியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

