sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூணாறைச் சுற்றி வீசிய பலத்த காற்று; மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

/

மூணாறைச் சுற்றி வீசிய பலத்த காற்று; மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மூணாறைச் சுற்றி வீசிய பலத்த காற்று; மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

மூணாறைச் சுற்றி வீசிய பலத்த காற்று; மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூலை 29, 2024 12:24 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று வீசிய பலத்த காற்றில் ரோடுகளில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூணாறிலும் சுற்றுப் பகுதிகளிலும் நேற்று இடைவெளி விட்டு மழை பெய்த நிலையில் பலத்த காற்று வீசியது. அதில் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. பலத்த காற்று வீசியபோது மின் கம்பிகள் உரசி பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.மூணாறு, அடிமாலி ரோட்டில் சித்திராபுரம் பகுதியில் ரோட்டில் மரம் சாய்ந்து ஓடிக் கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது விழுந்தது. வேன் சிறிது சேதமடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் காயம் எதுவும் இன்றி தப்பினர். அந்த வழியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

அதேபோல் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் சட்ட மூணாறு பகுதியில் நேற்று பகல் 2:30 மணிக்கு பலத்த காற்றில் ரோட்டில் மரம் சாய்ந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. மூணாறு தீயணைப்பு துறையினர், மறையூர் போலீசார் ஆகியோர் பொது மக்களின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us