ADDED : ஜூலை 02, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார்: 'கன்னடருக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்' என்று கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
கோலார், முல்பாகல், மாலுார், பங்கார்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கோலார் மாவட்ட கன்னட ரக் ஷன வேதிகே அமைப்பினர், கோலார் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். 'கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று மாவட்ட தலைவர் ராகவேந்திரா தலைமையில் கோஷங்கள் எழுப்பினர்.
இது தொடர்பான மனுவை கலெக்டரிடம் வழங்கினர். போராட்டம் காரணமாக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.