ADDED : மார் 02, 2025 11:58 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, சக மாணவன் தாக்கியதில் மாணவன் படுகாயமடைந்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், ஷொரணூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்- சிந்து தம்பதியரின் மகன் சாஜன் 20. தனியார் தொழில்துறை தொழில்நுட்ப கல்லுாரியில் ஆட்டோமொபைல் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி கல்லுாரிக்குச்சென்ற சாஜனை சக மாணவனான கிஷோர் 20, சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் முகத்திலும் மூக்கிலும் படுகாயமடைந்த சாஜனை, முதலில் ஒற்றைப்பாலம் தாலுகா மருத்துவமனையிலும் தொடர் தீவிர சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து, மருத்து வமனையில் தொடரும் சாஜன் அளித்த புகாரின் அடிப்படையில், ஒற்றைப்பாலம் போலீசார் பாலப்புரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.