UPDATED : ஏப் 18, 2024 07:50 PM
ADDED : ஏப் 18, 2024 07:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வரம்: தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தரை, கப்பல், மற்றும் வானிலிருந்து நீண்ட, குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதனை செய்து வருகிறது.
இதன்படி தரையிலிருந்து குறுகிய இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை இன்று ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக சோதனை நடத்தியது, ஏவுகணை விண்ணில் சீறிப்பாய்ந்த வீடியோவை ‛எக்ஸ்' தளத்தில் டி.ஆர்.டி.ஓ. பதவிவேற்றியுள்ளது.

