ADDED : ஏப் 14, 2024 09:49 PM

சிக்கபல்லாப்பூர் : சிக்கபல்லாப்பூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர், பாகேபள்ளி தாலுகா குலுார் கிராமத்தில், நேற்று காலை பிரசாரம் செய்தார். அப்போது தலித் சமூகத்தை சேர்ந்த பெத்தவெங்கடராயப்பா வீட்டில், காலை உணவு சாப்பிட்டார். முன்னதாக, பெத்தவெங்கடராயப்பாவின் மனைவி லட்சுமிதேவம்மா, சுதாகருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றார்.
காலை உணவு சாப்பிட்ட பின்பு, சுதாகர் அளித்த பேட்டியில், ''அம்பேத்கர் பிறந்தநாள் அன்று, தலித் ஒருவர் வீட்டில் உணவு சாப்பிட்டது, எனக்கு கிடைத்த பாக்கியம். அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றுபவன் நான். காங்கிரஸ் ஓட்டு வங்கிக்காக, தலித் சமூகத்தை பயன்படுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ., அம்பேத்கரின் வழிகாட்டுதல்படி நடக்கிறது,'' என்றார்.
சுதாகர், சிக்கபல்லாப்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, அவரது சொந்த ஊரான பெரேசந்திராவில், தலித் சமூகத்திற்கு மயானம் ஒதுக்கி தரவில்லை என்று, அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது.
சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மயானத்திற்கு, ஒரு ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தார்.
இதனால் சுதாகர் மீது தலித் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அந்த அதிருப்தியை போக்கவே, தலித் வீட்டில் உணவு சாப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

