இந்திரா சாஹ்னே உள்பட 38 பேர் சீனியர் வக்கீல்களாக நியமனம்; சுப்ரீம் கோர்ட்
இந்திரா சாஹ்னே உள்பட 38 பேர் சீனியர் வக்கீல்களாக நியமனம்; சுப்ரீம் கோர்ட்
UPDATED : ஆக 15, 2024 11:04 AM
ADDED : ஆக 15, 2024 10:32 AM

புதுடில்லி: இந்திரா சாஹ்னே உள்பட 38 பேரை சீனியர் வக்கீல்களாக நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு முதல் தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டின் இரு மூத்த நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல், சி.ஏ.ஜி., மற்றும் பார் கவுன்சில் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர் அடங்கியக் குழு சீனியர் வக்கீல் நியமனங்களை மேற்கொண்டு வருகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
கடந்த ஆண்டு 138 வக்கீல்கள் உச்சநீதிமன்றத்தின் சீனியர் வக்கீல் பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 71 பேர் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திரா சாஹ்னே உள்பட 38 பேரை சீனியர் வக்கீல்களாக நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.
நியமிக்கப்பட்ட சீனியர் வக்கீல்களின் பட்டியல்
அபிமன்யூ பண்டாரி,
அனிந்திதா புஜாரி
அனிருதா அனந்த் ஜோஷி
அபர்ணா பட்
அசோக் பணிகிரஹி
பாலாஜி
பன்சுரி ஸ்வராஜ்
தவீத்நர் பால் சிங்
கவுரவ் ஷர்மா
இந்திரா சாஹ்னே
கவிதா ஜா
கவால்ஜித் கோச்சார்
மகேஷ் சந்திரா திங்ரா
மணீஷ் கோஸ்வாமி
மணீஷா டி. கரியா
ரபத் ஷம்ஷாத்
மோனிகா குசைன்
நாச்சிகெட்டா சுதாகர் ஜோஷி
நளின் கோலி
காங்கோம் ஜுனியர்
பரதேஸ்வர்
பிரசென்ஜித் கேஸ்வானி
புனீத் ஜெயின்
புர்விஸ் ஜிதேந்தர் மால்கன்
நெடுமாறன்
ராகுல் கவுசிக்
ரிஷி மல்கோத்ரா
ரோமி ஷாகோ
ருச்சி கோலி
ருத்ரேஷ்வர் சிங்
ஷேஷாத்ரி ஷேகர் ராய்
ஷதன் பரசத்
ஷாந்த்குமார்
ஷரன் தேவ் சிங் தாகூர்
ஷாஷி கிரன்
ஷேகரா கவுடா
உதய் பாஸ்கர் துபே
விஷ்ணு மேக்ரா
யாஷ்ராஜ் சிங் தியோரா.