ஆன்மிகம்
கல்யாண மஹோற்சவம்
சீதா ராகவ - ராதா மாதவ கல்யாண மஹோற்சவம். நேரம்: காலை 8:00 மணி: கல்யாண மஹோற்சவம், ஆஞ்சநேய உற்சவம்; மதியம் 1:30 மணி: மஹா பிரசாதம் வழங்கல். தொடர்புக்கு பி.எஸ்.சுப்பிரமணியன், 99944 58580 இடம்: பூமீ நீளா சமேத வெங்கடரமண சுவாமி கோவில், பி.இ.எம்.எல்., லே - அவுட், குந்தலஹள்ளி.
ஆண்டு விழா
தங்கத்தாய் தேவாலயத்தின் 49 ம் ஆண்டு விழா. நேரம்: காலை 11:00 மணி: பெங்களூரு ராமமூர்த்தி நகர் திருகுடும்ப தேவாலயம் பங்கு தந்தை சூசைராஜ்; மாலை 5:15 மணி: பெங்களூரு பேட்ராயனபுரா செயின்ட் பீட்டர்ஸ் பால்ஸ் தேவாலயம் பங்கு தந்தை டோமினிக் சேவியரின் மறையுரை. இடம்: உரிகம், தங்கவயல்.
பொது
கலாசார மாநாடு
பாரத் - பாரதி அமைப்பு சார்பில் கலாசார மாநாடு. மேலும் விபரங்களுக்கு அமைப்பு தலைவர் அனிதா ஆச்சார்யா 99029 14271. நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: 28, கே.இ.பி., இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் பில்டிங், ரேஸ் கோர்ஸ் குறுக்கு சாலை, நேரு நகர், ஆனந்தராவ் சதுக்கம் அருகில், பெங்களூரு.
அறிவியல் கண்காட்சி
சயின்ஸ் கேலரி பெங்களூரு சார்பில் 'சை560' கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சயின்ஸ் கேலரி பெங்களூரு, 10 - 11, பல்லாரி பிரதான சாலை, சஞ்சய் நகர், பெங்களூரு.
களிமண் பயிற்சி
ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
நடன பயிற்சி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.
மெழுகுவர்த்தி பயிற்சி
16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டூடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
சன் அர்பன் யூனியன் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சன் அர்பன் யூனியன், மந்த்ரி அவென்யு, கே.எச்.பி., கேம்ஸ் வில்லேஜ், கோரமங்களா.
ஹார்டு ராக்கபே வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.
மேஜிக் கியூ வழங்கும் பாலிவுட் இரவு இசை. நேரம்: 9:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: மேஜிக் வியூ, 36, 100 அடி சாலை, சீனிவாகலு, ஈஜிபுரா.
எக்ஸ்பிரஷன்ஸ் வழங்கும் இரவு இசை. நேரம்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஷன்ஸ், 187, வர்த்துார் பிரதான சாலை, பெங்களூரு.
ஒயிட் லோடஸ் ஜெயன்ட் பஞ்சாபி நைட். நேரம்: இரவு 7:30 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
காமெடி
காமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:40 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
புளூபல்ப் காமெடி வழங்கும் ஜோக்ஸ் ஆஜ் கல். நேரம்: இரவு 9:30 மணி முதல் 10:45 மணி வரை. இடம்: பர்கர்மேன், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.
ஹளே - தி ஆர்ட் ஹப் வழங்கும் பெங்களூரு டூர் காமெடி. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஹளே - தி ஆர்ட் ஹப், 1335, எட்டாவது பிரதான சாலை, மில்க் காலனி இரண்டாவது ஸ்டேஜ், ராஜாஜி நகர்.
ஜஸ் டர்ப்ஸ் சாக்லேடியர்ஸ் வழங்கும் 'ஹு கால்டு ஸ்ரவன்' காமெடி. நேரம்: மாலை 4:45 மணி முதல் 6:15 மணி வரை. இடம்: ஜஸ் டர்ப்ஸ் சாக்லேடியர்ஸ், 9, ஜக்கூர் சாலை, பெங்களூரு.
சர்கஸ் வழங்கும் ஜோக்ஸ் ஆன் தி பீச். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: சர்கஸ், 436, 17 வது குறுக்கு சாலை, செக்டர் 4, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.